News June 29, 2024

வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து, இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Similar News

News November 21, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் உள்ள காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குறைகளைக் களைவதற்காக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் வரும் (நவம்பர் 24) அன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். நுகர்வோர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

image

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 21, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!