News March 30, 2025
உயிரிழப்பு 1,644 ஆக உயர்வு

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஆக இருக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், சாலைகள், பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
Similar News
News January 16, 2026
ஜல்லிக்கட்டு நாயகன் கீழையூர் டொங்கான் காலமானார்

ஜல்லிக்கட்டு நாயகன்களில் முக்கியமானவரான கருப்பணன்(எ) கீழையூர் டொங்கான் உடல்நலக்குறைவால் காலமானார். 1965-ல் முக்கம்பட்டியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவினார். ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்கிய இவர், இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்தியுள்ளார். பொங்கல் நாளில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 16, 2026
BREAKING: கூட்டணி குறித்து நாளை காங்., இறுதி முடிவு

‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் எனக்கோரி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும், சட்டப்பேரவை தேர்தல், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக காங்., தலைவர்களுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது. இதன்பிறகு கூட்டணி (DMK அல்லது TVK) குறித்த அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகவுள்ளது.
News January 16, 2026
செந்தில் பாலாஜிக்கு அடுத்த அதிர்ச்சி

செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தீவிரப்படுத்தக்கோரி, SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். எனவே, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரை முதலில் விசாரித்து முடிக்க வேண்டும் என மனுதாரர் Y.பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.


