News April 15, 2025

வெயிலுக்கு பலி: அறிக்கை அனுப்ப மத்திய அரசு உத்தரவு

image

வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Similar News

News November 28, 2025

நாளை பள்ளிகள் 10 மாவட்டங்களில் விடுமுறை

image

புயல் எதிரொலியாக நாளை (நவ.29) நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விழுப்புரம், தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ல் மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறை.

News November 28, 2025

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது: PM மோடி

image

2025-26-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது ஊக்கமளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி ஆதரவு கொள்கைகள் மற்றும் சீர்திருந்தங்களின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கடின உழைப்பு, முயற்சியின் வெளிப்பாடு இது என்றும், அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வையும் எளிதாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News November 28, 2025

இனி II CLASS ஸ்லீப்பர் கோச்சில் பெட்ஷீட், தலையணை உண்டு!

image

ரயில்களில் வழக்கமாக AC வகுப்புகளில் மட்டுமே பயணிகளுக்கு பெட்ஷீட்டும், தலையணையும் வழங்கப்படும். இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து Non AC ஸ்லீப்பர் கோச்சிலும், ₹50 செலுத்தி பெட்ஷீட், தலையணையை பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தலையணை மட்டும் ₹30-க்கும், பெட்ஷீட்டை ₹20-க்கும் கூட பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!