News July 5, 2024

அசாமில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

image

அசாமில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 46 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 29 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் ஆகஸ்ட் 15க்குள் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Similar News

News September 22, 2025

மூளை நன்றாக செயல்பட

image

மூளை நன்றாக செயல்படுவதால் நினைவாற்றல், கவனம், முடிவுகள் எடுப்பது ஆகியவை மேம்படுகின்றன. சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்க முடியும். இதனால் மனநலன் கூடும். இதற்கு என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த செயல்பாட்டை செய்யுங்கள். மேலும், உங்களுக்கு தெரிந்த வேறு ஏதேனும் செயல்பாடு இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2025

அன்புமணி கைப்பாவையாக செயல்படுகிறார்: MLA அருள்

image

அன்புமணி, அவரது தந்தையை சந்திக்க வேண்டும், அவர் பேச்சை கேட்பதாக கூற வேண்டும் என்று MLA அருள் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்தாலே, அவர் எதிர்பார்த்ததும், எதிர்பாராததும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்புமணி கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இயக்குபவரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். ராமதாஸை இயக்க யாரும் பிறக்கவில்லை, இனி பிறக்கவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.

News September 22, 2025

நவராத்திரி நாள்களில் விரதம் இருக்கிறீர்களா?

image

நவராத்திரியில் அம்பாள் அருள்பெற பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், டாக்டரை பரிசீலிக்காமல், உண்ணாவிரதம் இருப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சோர்வு, தலைச்சுற்றல், ரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

error: Content is protected !!