News April 1, 2024
நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார்

பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரண்யாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் வீட்டின் கேட் சரண்யாவின் காரில் இடிப்பதுபோல் நின்றதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
கோலியை முந்திய நியூசிலாந்து வீரர்!

ஐசிசி ODI பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், 61 புள்ளிகள் ஏற்றம் கண்டு 845 புள்ளிகளுடன் உள்ளார். 795 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். NZ தொடரில் 61 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
News January 21, 2026
DMK கூட்டணியில் தமிமுன் அன்சாரி

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி (MJK), 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இணையவுள்ளது. MJK தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த தேர்தல் பணியாளர்கள் கூட்டத்தில், வடமேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய உறுதி ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிமுன் அன்சாரிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.


