News March 6, 2025
15 ஆண்டுகளுக்கு பின் பழைய முறையில் மரண தண்டனை

அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொல்லும் (Firing Squad) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2001ல் முன்னாள் காதலியின் பெற்றோரை கொலை செய்ததற்காக, பிராட் சிக்மோன் (67) என்பவருக்கு நாளை இத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 1608ல் அறிமுகமான இந்த தண்டனை முறை, கடைசியாக 2010ல் செயல்படுத்தப்பட்டது. 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் இதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டது.
Similar News
News March 6, 2025
குழந்தை பிறப்பு விகிதம் (TFR) என்றால் என்ன?

பெண்கள் தங்கள் வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே பிறப்பு விகிதம் (Fertility Rate -TFR) ஆகும். ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க, அந்நாட்டில் TFR, 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் TFR தற்போது 2.01 தான். உபி, பிஹார் போன்ற வடமாநிலங்களில் இதைவிட அதிகம். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த தமிழ்நாட்டிலோ TFR விகிதம் 1.52 ஆகவுள்ளது. இதுவே தற்போது பாதகமாகிவிட்டது.
News March 6, 2025
பயத்தில் தடுமாறிவிட்டார் CM: அண்ணாமலை சாடல்

தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பதைக் கண்டு, CM ஸ்டாலின் பயத்தில் தடுமாறியதாகச் சாடிய அவர், இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து பின் வாங்கப்போவதில்லை என்றார். வீடு வீடாக செல்வோம், எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாக கைது செய்ய முடியும் என்று வினவியுள்ளார்.
News March 6, 2025
பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. டெல்லி அரசு வரையறை

டெல்லி தேர்தலின்போது பாஜக தரப்பில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பாஜக, அத்திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்கள், IT வரி கட்டாதோருக்கு ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.