News August 15, 2024
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: மம்தா பானர்ஜி

மே.வங்க பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மம்தா வலியுறுத்தியுள்ளார். நீதிக்காக போராடும் சக மாணவர்களை தான் குறை சொல்ல விரும்பவில்லை என்ற அவர், இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சிபிஐயிடம் கொடுத்துள்ளோம் என்றார். குற்றவாளிகளை தூக்கிலிட்டால் தான் மற்றவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
Similar News
News December 6, 2025
நாமாக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று டிசம்பர்.05 நாமக்கல்-( பாலசந்தர் – 9498169138 ) ,வேலூர் -( தேசிங்கராஜன் – 9442260691 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( கெளரிசங்கர் – 8973319946 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 6, 2025
₹7.44 லட்சம் கோடிக்கு WB-ஐ வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

Warner Bros. நிறுவனத்தை ₹7.44 லட்சம் கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் கையகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் ஸ்டுடியோக்கள், HBO MAX OTT தளம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். அடுத்த 12 – 18 மாதங்களுக்கு இந்த ஒப்பந்தத் தொகை கைமாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<18474738>>Warner Bros.-ன்<<>> Harry Potter, Game of Thrones உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற படங்கள், வெப்சீரிஸ்கள் இனி நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும்.
News December 6, 2025
சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.77 லட்சம் பேர் பலி

நாடு முழுவதும் 2024-ல் மட்டும் சாலை விபத்துகளால் 1.77 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக பார்லிமெண்டில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம். அதேநேரத்தில், சாலை போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மதித்து, விலை மதிப்பற்ற உயிர்களை காப்போம்!


