News August 8, 2025
‘காந்தாரா’ பட நடிகர்கள் மரணம்.. தொடரும் சோகம்

காந்தாரா படத்தில் நடித்த <<17344047>>பிரபாகர் கல்யாணி<<>>, இன்று காலமானார். ஏற்கெனவே காந்தாரா சேப்டர் 1 படத்தில் நடித்த 3 நடிகர்கள் மரணம் அடைந்துள்ளனர். மே 6-ல் <<16341703>>கபில் <<>> செளபர்ணிகா நதியில் மூழ்கி பலியானார். மே 11-ல் நடனமாடி கொண்டிருந்த <<16390958>>ராகேஷ் பூஜாரி<<>> மாரடைப்பால் உயிரிழந்தார். இதேபோல், <<16678105>>விஜூ <<>>மாரடைப்பால் காலமானார். இதனால், படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Similar News
News August 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 9 – ஆடி 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News August 9, 2025
பொளந்துவிட்ட பேட்ஸ்மேன்கள்.. 3 பேர் 150-க்கும் மேல்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் நியூஸி., வீரர்கள் மரண அடி அடிக்கின்றனர். கான்வே 153 ரன்களுக்கு அவுட் ஆக, நிக்கோலஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக வில் யங் 74, ஜேக்கப் டஃபி 36 ரன்களில் அவுட் ஆகினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி., அணி 601/3 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
News August 9, 2025
இந்தியா யாருக்கும் அடிபணியாது: பியூஷ் கோயல்

‘இந்தியா யாருக்கும் அடிபணியாது’ என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50% வரிவிதித்தது. இதுபற்றி பேசிய பியூஷ் கோயல், இந்தியாவை ‘செத்துப்போன பொருளாதரம்’ என டிரம்ப் விமர்சித்தார். அதே போல் ராகுல் காந்தியும் விமர்சித்திருக்கிறார். இந்தியாவை கிண்டல் செய்த ராகுலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார். பணம், அந்நிய செலாவணி இருப்பு, பங்குசந்தைகள் வலுவாக இருப்பதாகவும் கூறினார்.