News August 15, 2024

பள்ளி, கல்லூரி மாணவிகள் மரணம்

image

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாணவிகள் நெல்லை, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்தபோது, இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

Similar News

News November 28, 2025

நாளை பள்ளிகள் 7 மாவட்டங்களில் விடுமுறை

image

புயல் காரணமாக கடலூரைத் தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்தை தொடர்ந்து, விழுப்புரத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

விஜய் கட்சியில் ஜெயக்குமார் இணைகிறாரா?.. அறிவித்தார்

image

செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகமான ஜெயக்குமாரும் தவெகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார், மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் எனவும், உயிர் போனாலும் தன் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 28, 2025

எயிட்ஸுக்கு தடுப்பூசி… விரைவில் இந்தியாவில்!

image

100% செயல்திறன் கொண்ட எயிட்ஸ்(HIV) தடுப்பூசி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. USA-வின் கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி, FDA அங்கீகாரம் பெற்றுவிட்டது. இந்நிலையில் அதன் உரிமம் பெற்று இந்தியாவில் lenacapavir என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 2 முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் போதும். HIV தொற்று தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.

error: Content is protected !!