News August 15, 2024
அலோபதி மருந்துகளால் உயிரிழப்பு: ராம்தேவ்

அலோபதி மருந்துகளை உட்கொள்வதால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பதாக பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ சுயசார்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக உச்சநீதிமன்றத்தில் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கு கடந்த ஆக. 13ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News December 3, 2025
நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News December 3, 2025
நாளை காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
News December 3, 2025
மக்கள் தொகை கணக்கெடுக்க தயாரான மத்திய அரசு

இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
லோக்சபாவில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு இந்த தகவலை உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்துள்ளார். அதன்படி முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டம் பிப்ரவரி 2027-ல் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


