News March 28, 2025
நிலுவையுடன் அகவிலைப்படி உயர்வு… எப்போது கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கான <<15913593>>அகவிலைப்படியை<<>> (DA) 53-ல் இருந்து 55% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது, ஜனவரி, பிப்ரவரி மாத நிலுவைத் தொகையுடன் மார்ச் மாத ஊதியத்தில் சேர்த்து வழங்கப்படும். அதாவது, இந்த மாதம் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கான அகவிலைப்படி மொத்தமாகக் கிடைக்கும். SHARE IT.
Similar News
News April 1, 2025
தங்கம் விலை சவரன் ₹68,000ஐ கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.1) சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510க்கும், சவரன் புதிய உச்சமாக ₹68,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த சில நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.
News April 1, 2025
INDvsENG: முக்கிய கோப்பைக்கு ஓய்வு.. ஏன்?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து பட்டோடி டிராபியை விளையாடி வருகின்றன. Ex இந்திய வீரர் பட்டோடி பெயரில் நடத்தப்படும் இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுப்பதாக ENG கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கிரிக்கெட்டில் சாதித்த மற்ற வீரர்களின் பெயரையும் பயன்படுத்துவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு INDvsENG தொடரின் போது கோப்பைக்கான புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படும்.
News April 1, 2025
ஜிப்லியால் CHAT GPTக்கு குவிந்த பயனாளர்கள்

போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு ஜிப்லி புகைப்படங்களால் நிறைந்துள்ளது சமூக வலைதளங்கள். இதனால் OPEN AI நிறுவனத்தின் CHAT GPT-யில் ஜிப்லி அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களில் மட்டும் 10 லட்சம் புதிய பயனாளர்கள் அதில் இணைந்துள்ளதாக CEO சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார். ஜப்பான் கார்டூனை வைத்து உருவாக்கப்பட்ட ஜிப்லியை, அனைத்து தர மக்களும் தங்களுக்கு ஏற்றார் போல் உருவாக்கி ரசித்து வருகின்றனர்.