News April 2, 2025
பயணிகளே.. உங்களின் கனிவான கவனத்திற்கு….

பயண வகுப்பின்(Class) அடிப்படையில் ரயிலில் பயணிக்கும் போது, எத்தனை கிலோ எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரையிலும், ஏசி 2 ஆம் வகுப்பில் 50 கிலோ வரையிலும், ஏசி 3 ஆம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் 40 கிலோ வரையிலும், ஜெனரல் கம்பார்ட்மெண்டில் 35 கிலோ வரையிலும் எடுத்துச் செல்லலாம்.
Similar News
News November 28, 2025
ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடக்க வன்முறையை கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டு Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புர்பச்சல் ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில் ஹசீனா & அவரது குடும்பத்தினருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
NDA வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது: நாராயணசாமி

புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என Ex CM நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், NDA கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைந்தார். அத்துடன், டிசம்பரில், அங்கு விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
News November 28, 2025
மோடியின் S5 கொள்கைகள் தேவை: ராணுவ தளபதி

உலக ஒழுங்கு நிச்சயமற்ற & சிதைந்த நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார். சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025 நிகழ்வில் பேசிய அவர், சர்வதேச அளவில் பெரும் சக்திகளின் போட்டி உலகை பல துருவங்களாக பிரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் என்ற PM மோடியின் S5 கொள்கைகளின் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.


