News March 1, 2025
அன்பு சகோதரர் ஸ்டாலின்.. ராகுல் பிறந்தநாள் வாழ்த்து

அன்பு சகோதரர் ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு X தளத்தில் வாழ்த்து கூறிய அவர், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு, அரசியலமைப்புக்காக உறுதியாகத் தொடர்ந்து நிற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 31, 2026
தமிழக தேர்தல் களத்தில் PM மோடி

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஏப்.4-ம் தேதி PM மோடி தமிழகம் வருகிறார். அன்று சென்னையில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை செய்யவுள்ளார். அதைதொடர்ந்து, மயிலாப்பூரில் ரோடு ஷோ செல்லும் PM மோடி அத்தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாவிட்டால் பதவி பறிக்கப்படும் என திமுக மா.செ.,க்களை எச்சரித்ததாக அவர் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் சிறிதளவு மெத்தனப்போக்கு காட்டினாலும் தலைமையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
BJP வேட்பாளர் பட்டியல் ரெடி.. அண்ணாமலை போட்டியா?

சட்டப்பேரவை தேர்தலில், பாஜக சார்பாக போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகிறது. இதற்காக காலை 10 மணி அளவில் சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில பாஜக தலைவர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதனிடையே, கோவை வடக்கு தொகுதியின் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. <<-se>>#TNElection2026<<>>


