News October 8, 2025
அன்பே.. ஆருயிரே.. அனுபமா CLICKS..!

பிரேமம் திரைப்படம் மூலம் பலரது மனதை கொள்ளை கொண்ட அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு, தமிழ், மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரது க்யூட் எக்ஸ்பிரஷனுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெகுநாள்கள் கழித்து, அனுபமாவை ‘பைசன்’ திரைப்படத்தில் காணலாம். தற்போது, அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிடிச்சிருந்தா லைக் போடுங்க.
Similar News
News October 8, 2025
330 மடங்கு அதிகமாக கிரெடிட் ஆன சம்பளம்

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சம்பள நாளில் திடீரென, சம்பளத்தை விட 10 மடங்கு அதிக பணம் கிரெடிட் ஆனால் எப்படி இருக்கும்? சிலியில் ஒருவருக்கு அவருடைய சம்பளத்தை (₹46,100) காட்டிலும் 330 மடங்கு (₹1.5 கோடி) அதிகமாக கிரெடிட் ஆகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். நிறுவனம் கூடுதல் பணத்தை திரும்ப கேட்ட போதும், சட்ட போராட்டம் நடத்தி ₹1.5 கோடிக்கும் உரிமையாளராகியுள்ளார்.
News October 8, 2025
லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும்: CP ராதாகிருஷ்ணன்

நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜ்யசபா தலைவர் CP ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும் என CPR கூறியுள்ளார்.
News October 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.