News April 27, 2025
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற்ற அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இதனை அனைத்து மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 27, 2025
UPI-ல் பில் கட்ட கிரெடிட் கார்டை யூஸ் பண்ணுவது எப்படி?

கிரெடிட் கார்டை Google pay-யுடன் இணைத்து ஈசியாக, UPI பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு, G-Pay அல்லது ஏதோ ஒரு UPI-யை ஓபன் செய்து, அதில், Bank accounts-க்கு செல்லுங்கள். அதில், Link New Credit Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களின் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவிடவும். பிறகு போனுக்கு வரும் OTP – யை பதிவிட்டு, primary transaction-ஆக தேர்வு செய்தால் போதும். ஆனால், செலவில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்!
News April 27, 2025
2 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 2 MLA-க்கள் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் MLA டாக்டர். R. லட்சுமணனுக்கு வனத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் அரவக்குறிச்சி MLA P.R.இளங்கோவுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
News April 27, 2025
86,271 பேருக்கு இலவச பட்டா: அரசாணை வெளியீடு

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86,271 பேருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.