News February 19, 2025
UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

UPSC முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 22 முதல் 28 வரை, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Similar News
News February 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 185
▶குறள்:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
▶பொருள்: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
News February 21, 2025
ஜாகீர் கான் சாதனையை முறியடித்த ஷமி

ஐசிசி தொடர்களில், இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானின் சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை கற்றும் சாம்பியன்ஸ் டிராஃபியில், இந்திய அணிக்காக விளையாடிய ஜாகீர் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில், BANக்கு எதிரானப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பெருமைக்கு ஷமி சொந்தக்காரராகியுள்ளார்.
News February 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!