News April 9, 2025
கெடு முடிந்தது… சீனாவுக்கு 104% வரி

சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்கா கொடுத்த 24 மணி நேர கெடு முடித்தும் சீனா வரிவிதிப்பை திரும்பப்பெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
News November 2, 2025
மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.


