News April 12, 2025
ஜனாதிபதிக்கு காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதிக்கு முதல்முறையாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 1, 2025
எங்கு சென்றாலும் இந்தியாவை மறக்காதீங்க: CPR

அடுத்த கூகுள், டெஸ்லா நமது நாட்டில் உருவாக வேண்டும் என VP CPR கூறியுள்ளார். ஹரியானாவின் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், PM மோடி கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் & நாகரிகத்தில் வேரூன்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார். மேலும், இளைஞர்கள் எங்கு சென்றாலும், இந்தியா எப்போதும் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
அகண்டா-2 டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கிய Fan

டிச.5-ல் அகண்டா 2 வெளியாகவுள்ளதால் உலகளவில் பாலையா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதன் ஒருபகுதியாக ஜெர்மனியை சேர்ந்த பாலையா ரசிகர் ஒருவர் இப்படத்தின் ஒற்றை டிக்கெட்டை ₹2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அகண்டா 2 படத்தின் Super Fan Ticket-ஐ வேறொருவர் ₹1 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
தவெக வலையில் சிக்கும் அதிமுக சீனியர்கள்?

செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டுவருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


