News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
Similar News
News September 17, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 17, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இந்த யோகா பண்ணுங்க!

ஹஸ்த பதங்குஸ்தாசனம் செய்வதால், முழங்கால் & முதுகுத்தண்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது *தரையில் கை, கால்களை நீட்டி படுக்கவும் *கால்களை ஒன்றாக வைத்து, முட்டியை மடக்காமல் மேலே தூக்கவும் *கை இரண்டையும் விரித்த நிலையில்(படத்தில் உள்ளது போல வைக்கவும்) *இந்த பயிற்சியை செய்ய தொடங்குபவர்கள் முதலில், தலைக்கு ஒரு சிறு தலகாணியும், கால்களை சுவர் மீதும் வைத்து பயிற்சி செய்யலாம். SHARE.
News September 17, 2025
தேர்தல் வேலை செய்யாவிட்டால் ஓய்வெடுங்கள்: மூர்த்தி

தேர்தல் பணிகள் செய்யாத நிர்வாகிகள் வகிக்கும் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.