News June 29, 2024

புதிய சாதனை படைத்த டி காக்

image

ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டி காக் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது வரை 239 ரன்களை குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். இரண்டாவது இடத்தில் 238 ரன்களுடன் காலிஸ் (2009 ஆண்டு), மூன்றாவது இடத்தில் 187 ரன்களுடன் டுமினி (2009 ஆண்டு) உள்ளனர்.

Similar News

News September 20, 2025

ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ படம் பரிந்துரை

image

2026 ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் கான் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை பெற்ற நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News September 20, 2025

ராசி பலன்கள் (20.09.2025)

image

➤மேஷம் – துணிவு ➤ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – நலம் ➤சிம்மம் – தனம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – போட்டி ➤விருச்சிகம் – பெருமை ➤தனுசு – செலவு ➤மகரம் – உறுதி ➤கும்பம் – சுகம் ➤மீனம் – ஆக்கம்.

News September 19, 2025

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

image

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய 140 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் ஷரியா சட்டங்கள் மற்றும் தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலினம் மற்றும் வளர்ச்சி, தகவல் தொடர்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!