News October 22, 2025
கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.
Similar News
News October 22, 2025
கூட்டணி கணக்கை மாற்றும் அதிமுக

தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், EPS முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தீபாவளிக்கு திமுகவில் கொடுக்கப்பட்ட பரிசுகள் அக்கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளதாக Ex அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனால், ADMK நிர்வாகிகளை உற்சாகமடைய செய்ய திட்டம் வகுக்கவும், TVK கூட்டணியை மட்டும் நம்பி இல்லாமல் நமது(ADMK) வாக்குகள் சிதறாமலும், அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு EPS அறிவுறுத்தினாராம்.
News October 22, 2025
ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.
News October 22, 2025
அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின் ஆலோசனை

திமுக நிர்வாகிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘உடன்பிறப்பே வா’ தலைப்பின் கீழ் தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதிகளின் நிர்வாகிகளிடம் வெற்றி வாய்ப்பு, தொகுதியின் நிலவரம், வேட்பாளர்கள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.