News December 23, 2025

DC கேப்டனாகிறாரா ஜெமிமா ரோட்ரிக்ஸ்?

image

WPL-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 சீசன்களாக DC அணிக்காக விளையாடியுள்ள ஜெமிமா 507 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் WC-ல் ஜெமிமா சிறப்பான பங்காற்றியிருந்தார். 2026, ஜன.9-ல் தொடங்கும் WPL தொடர் பிப்.5-ல் நிறைவடைகிறது. ஜன.10-ல் மும்பை இந்தியன்ஸை DC முதலில் எதிர்கொள்கிறது.

Similar News

News December 27, 2025

மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

2025-ல் ₹500 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள்!

image

இந்த ஆண்டு சில பெரிய படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஃப்ளாப் ஆனாலும், பல திரைப்படங்கள் செம ஹிட் அடித்துள்ளன. இந்த ஆண்டில் மொத்தம் 5 படங்கள் ₹500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இந்த பட்டியலில் ஒரே ஒரு தமிழ் படம் தான் இடம்பெற்றுள்ளது. அது எந்த படம் என்பதையும், பட்டியலில் உள்ள படங்கள் எவை என்பதையும் மேலே SWIPE பண்ணி பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த படம் எது?

News December 27, 2025

90’s கிட்ஸ் நிலைமையை பாத்தீங்களா?

image

நாளுக்கு நாள் 90’s கிட்ஸ் பெண் தேடும் படலம் மீம்ஸ் போடும் அளவிற்கு பரிதாபமாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் கடலூரை சேர்ந்த இளைஞரோ, ’மணப்பெண் தேவை’ என தனது ஆட்டோவில் கலர்புல் விளம்பரம் செய்து பெண் தேடி வருகிறார். அதில் ஜாதி, மதம் தடையில்லை, வரதட்சணை தேவையில்லை. டிகிரி போதும் என மணப்பெண் தகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாவம் 90’s கிட்ஸ் என நெட்டிசன்கள் பரிதாபப்படுகின்றனர்.

error: Content is protected !!