News March 27, 2025

தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதி!

image

CM ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 3ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை திடீரென வாந்தி எடுத்ததால், பரிசோதனைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண CM செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 17, 2025

92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

image

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

News October 17, 2025

சாலைகளின் சாதி பெயர்களை நீக்குவதில் சிக்கல்

image

சாலைகளில் சாதி பெயர்களை மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று மதுரை HC உத்தரவிட்டுள்ளது. TN அரசின் ஆணைக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

News October 17, 2025

தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்

image

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை HC-ல் அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

error: Content is protected !!