News November 24, 2024
3வது நாள் Lunch: இந்தியா 321 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் BGT டெஸ்டில் இந்தியா அணி 3ம் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் மட்டும் இழந்து 275 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 321 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 141* ரன்களுடனும், படிக்கல் 25* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Similar News
News September 18, 2025
நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது தவறில்லை: ஐசிசி

நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது தவறில்லை என ஐசிசி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மீது நடவடிக்கை எடுக்க பாக். கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக UAE-க்கு எதிரான போட்டியில் விளையாடுவதை அந்த அணி ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியது. பாக்.கோரிக்கையை மறுத்துள்ள ஐசிசி, குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என கூறியுள்ளது.
News September 18, 2025
என் கனவு உலகத்தில்.. SK நெகிழ்ச்சி

இளம் வயதிலேயே அப்பாவை இழந்த நடிகர் SK, அவரை நினைத்து பல மேடைகளில் கண்ணீர் விட்டிருக்கிறார். தற்போது, அப்பாவுடன் சிரித்த முகத்துடன் அவர் போஸ் கொடுத்திருக்கிறார். இது நிஜ உலகத்தில் இல்லை, கனவு உலகத்தில் நடந்துள்ளது. வைரலாகிவரும் ஜெமினி டிரெண்டில் அவரும் இணைந்துள்ளார். அப்பாவின் தோளில் சாய்ந்து இருக்கும்படியான போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு, In my dream world எனக் குறிப்பிட்டுள்ளார்.
News September 18, 2025
PM மோடியின் முக்கிய முதலீடுகள்

75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ₹3.43 கோடி ஆகும். கடந்த மார்ச் 31-ம் தேதி, அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி SBI வங்கியில் ₹3,26,34,258 பிக்சட் டெபாஸிட் ஆக வைத்துள்ளார். அதே போல போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் ₹9,74,964 முதலீடு செய்திருக்கிறார். அவரிடம் உள்ள 4 தங்க மோதிரங்களின் மதிப்பு ₹3,10,365 ஆகும்.