News July 4, 2024
இந்த மாவட்டங்களில் விடிய விடிய மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அதிகாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Similar News
News September 22, 2025
பெண்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்: அன்புமணி

போதைப் பொருள் புழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் திமுக இருப்பதாகவும், பெண்கள் இப்போதைய ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 505-ல், 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் ஆறு, குளம், கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.
News September 22, 2025
குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம் பரிசுத்தொகை

குழந்தையை பெற்றுக்கொண்டால் கூடுதல் சுமை என யோசிக்கும் பலர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், தைவான் மக்கள் அப்படி யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு ஒரு குழந்தை பெற்றால் ₹3 லட்சம், இரட்டை குழந்தை பிறந்தால் ₹6 லட்சமும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தைவான் மக்கள் தொகையை அதிகரிக்க இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
News September 22, 2025
குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு ஏன் கொடுக்க கூடாது?

குழந்தைகளுக்கு முதல் ஒரு வயதில் சர்க்கரை, உப்பு கொடுத்ததால் அவர்களுக்கு அது பெரும் பாதிப்பை உடலில் ஏற்படுமாம். குழந்தைகளுக்கு சிறுநீரகங்கள் முதல் 12 மாதங்களில் முழுமையான வளர்ச்சியை அடையாது என்பதால், உப்பு(சோடியம்) பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுக்கும். இதனால் சத்தான உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். தாய்மார்களுக்கு ஷேர் பண்ணுங்க.