News January 3, 2025

₹550Crல் மகளுக்கு திருமணம்.. பணக்காரர் வீழ்ந்த கதை

image

தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டலின் சகோதரர் பிரமோத், கடந்த 2023ல் தனது மகளுக்கு ₹550 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், தற்போது சொந்த செலவுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது நிறுவனமான GIKIL, $116 mn கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீழ்ச்சி தொடங்கியது. 2019ல் போஸ்னியாவில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். கர்மா! உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்கும்.

Similar News

News August 14, 2025

65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை வெளியிட SC ஆணை

image

பிஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட ECI-க்கு SC உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 3 நாள்களுக்குள் டிஜிட்டல் வடிவில் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விவரங்களை வெளியிட முடியாது என ECI கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2025

சச்சினின் வருங்கால மருமகள்.. யார் அந்த சானியா?

image

<<17398284>>அர்ஜுன் டெண்டுல்கர்<<>> – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். மும்பை தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான சானியா, மற்ற இளம் தலைமுறையினரை போல் சமூக வலைதளங்களில் அதிகம் நாட்டம் காட்டியதில்லை. இந்தியாவில் முதல்முறையாக செல்லப் பிராணிகளுக்கென Mr. Paws எனும் மசாஜ் சென்டரை தொடங்கியவர். சாராவுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

News August 14, 2025

பயங்கரவாத எதிர்ப்பில் பாக்., USA பாராட்டு

image

பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியுள்ளார் USA வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்., ஈடுபடுவதாக பாராட்டியுள்ள அவர், இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன், கனிம வளங்கள் ஆகியவற்றில் புதிய பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!