News January 3, 2025
₹550Crல் மகளுக்கு திருமணம்.. பணக்காரர் வீழ்ந்த கதை

தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் சகோதரர் பிரமோத், கடந்த 2023ல் தனது மகளுக்கு ₹550 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், தற்போது சொந்த செலவுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது நிறுவனமான GIKIL, $116 mn கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீழ்ச்சி தொடங்கியது. 2019ல் போஸ்னியாவில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். கர்மா! உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்கும்.
Similar News
News July 6, 2025
வரலாற்றில் இன்று

1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது. 1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
News July 6, 2025
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ்.. MH-ல் புதிய வரலாறு!

2006-ல் சிவசேனாவில் இருந்து விலகி MHS-யை தொடங்கிய ராஜ் தாக்கரே மீண்டும் உத்தவ் தாக்கரே(UBT) உடன் இணைந்துள்ளார். மராட்டியத்தில் இந்தி மொழி திணிப்புக்கு ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முழக்கத்தோடு கைகோர்த்திருக்கும் இருவரும் மும்பை மாநகராட்சிக்கு விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் சேர்ந்து களம் காண உள்ளனராம். இது, அங்கு ஆளும் பாஜக அரசுக்கு சற்று அதிர்ச்சியும், சிவசேனாவினருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
News July 6, 2025
போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் தகவல்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் சில திருத்தங்களை மட்டும் ஹமாஸ் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஹமாஸுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலஸ்தீன – அமெரிக்க பேச்சாளர் பிஷாரா பாஹ்பா, முன்மொழிவின் திருத்தங்கள், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தடுக்காது என நினைக்கிறேன் என்றார்.