News January 23, 2025
காதலில் மருமகள்.. மாமியார் என்ன செய்தார் தெரியுமா?

உ.பி. சம்பல் பகுதியில் வேறொரு ஆணுடன் மருமகள் காதலில் இருப்பது தெரிந்ததும் மாமியார் செய்த செயல் இதுவரை யாரும் செய்யாதது. மகன் வெளியே போயிருக்கும்போது மருமகள் தினமும் யாருடனோ Chat செய்து வந்துள்ளார். இதனை அறிந்த மாமியார், மருமகளுக்கு தெரியாமல் FB மூலம் அந்த நபரை ஒரு பொது இடத்துக்கு வரச் சொல்லிருக்கிறார். நேரில் பார்த்ததும் அந்த நபரை செருப்பால் அடித்து துவைத்து விட்டார். இது எப்புடி!
Similar News
News November 28, 2025
FLASH: டிச.4-ல் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்

2 நாள்கள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வரும் 4-ம் தேதி இந்தியா வருகிறார். 4-ம் தேதி அன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். மறுநாள் 23-வது இந்தியா – ரஷ்யா ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக பிரச்னை நீடிக்கும் நிலையில், ரஷ்யா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு புடின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News November 28, 2025
மருத்துவ காலி பணியிடங்கள்: அன்புமணி Vs மா.சு.,

மருத்துவத்துறையில் 12,000 காலிபணியிடங்கள் இருப்பதாக <<18266345>>அன்புமணி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜீரோ காலி பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் எங்கே உள்ளது என்பதை ஆய்வு செய்து காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.


