News January 29, 2026

DATA சீக்கிரமே காலியாகுதா? Simple Solution!

image

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்கப்போ, 50% DATA காலி என SMS வருதா? இந்த சீக்ரெட் செட்டிங்-ஐ On பண்ணா போதும் DATA குறைவா செலவாகும். ▶உங்களுடைய INSTA PROFILE-க்கு போங்க ▶அங்க Top Right-ல காட்டுற 3 லைன்ஸ க்ளிக் பண்ணி, DATAனு தேடுங்க ▶DATA USAGE & MEDIA QUALITY-அ க்ளிக் பண்ணி DATA SAVER-அ ON பண்ணிக்கோங்க. அதான் இனி DATA கம்மியா செலவாகுமேன்னு, தொடர்ந்து ரீல்ஸ் பார்க்காதீங்க மக்களே. SHARE IT.

Similar News

News February 6, 2026

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக EX MLA ரத்தினசபாபதி சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனிடையே சசிகலாவை சந்தித்த அமமுக மாணவரணிச் செயலாளர் ஜீவிதா நாச்சியாரை டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். அதிமுக, அமமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து சசிகலாவை சந்தித்திருப்பது TTV, EPS-க்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

News February 6, 2026

சைபர் மோசடி.. ₹25 ஆயிரம் வரை இழப்பீடு

image

சிறிய அளவிலான டிஜிட்டல், சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை சீரமைத்து வருவதாக RBI அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன்படி ₹25,000 அல்லது இழந்த தொகையில் 85%, இதில் எது குறைவோ அந்த தொகை இழப்பீடாக வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் இந்த பலனை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

News February 6, 2026

FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில், கடந்த 2 நாள்கள் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்துள்ளது. பிப்.4 அன்று 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சவரனுக்கு ₹5,200 குறைந்து ₹1,14,000-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்து ₹2.80 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!