News March 18, 2024

திருச்செந்தூரில் ஓபிஎஸ் சாமி தரிசனம்

image

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார், திருச்செந்தூர் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

Similar News

News October 28, 2025

தூத்துக்குடி நாளை (29) பி எஸ் என் எல் குறைதீர்க்கும் முகாம்

image

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (29) தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக சேவை மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 28, 2025

தூத்துக்குடி: ரயின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

image

கோவில்பட்டி நடராஜபுரம் அருகே நேற்று காலை சரக்கு ரயில் ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கள்ள சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென அந்த ரெயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

தூத்துக்குடி: இன்று இந்த பகுதிகளில் மின் தடை

image

தூத்துக்குடி மக்களே, கோவில்பட்டி, வெம்பூர், சாத்தான்குளம், நாகலாபுரம், முத்தையாபுரம் ஆகிய மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக் 28) காலை 8 மணி முதல் 4 மணி வரையும், சில பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரையும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. ஆகையால் தங்களது அன்றாட பணிகளில் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது. மேலும் அறிய <>கிளிக்<<>> செய்யுங்க. SHARE IT

error: Content is protected !!