News June 18, 2024
தர்ஷன் மிகவும் மோசமானவர்: நடிகை ரம்யா

கன்னட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். ரசிகர் ரேணுகாசாமியை சித்தரவதை செய்து கொலை செய்த வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரம்யா, “தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர். ரவுடிகளை ரசிகர்களாக வைத்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
Similar News
News March 24, 2026
BREAKING: விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக ‘பானை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, தற்போது கூடுதலாக 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வந்தார்.
News March 24, 2026
பணக்கார வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரி தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், அசையும் சொத்து ₹328 Cr, அசையா சொத்து ₹269 Cr என மொத்தம் ₹597 Cr சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ₹25 Cr-க்கு 17.5 கிலோ தங்கம், ₹44 Cr-க்கு வைரம், ₹38 Cr-க்கு வாட்ச் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி CM-ஐ விட அதிக சொத்து வைத்திருக்கும் வேட்பாளர் இவர்.
News March 24, 2026
EPS-க்கு வெறும் அறிவிப்பாளர் பதவி: ஐ.பெரியசாமி

டெல்லியில் முடிவு செய்ததை சொல்லும் வெறும் அறிவிப்பாளர் பதவியை மட்டும் பெற்றதால் EPS-க்கு என்ன பெருமை என்று ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டிய இடத்தில், பாஜகவை EPS நிறுத்தியிருக்கிறார் என்று சாடிய அவர், ‘மாப்ள அவர்தான்; ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது’ என்பதை போல அமித்ஷாவின் கணக்கை EPS வாசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


