News April 15, 2025
ஈக்வடாரில் மீண்டும் அரியணை ஏறும் டேனியல் நோபோவா..!

ஈக்வடார் அதிபராக டேனியல் நோபோவா மீண்டும் பதவியேற்க உள்ளார். ஏப். 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அதிபர் டேனியல் நோபோவாவின் கட்சி 56% வாக்குகளை பெற்றுள்ளது. இடதுசாரி தலைவர் லூயிசா கோன்சலஸை அவர் தோற்கடித்துள்ளார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈக்வடாரில்தான் சர்ச்சை சாமியார் நித்தியானாந்தா இருப்பதாக சொல்லப்படுகிறது.
Similar News
News November 24, 2025
டாப் 10 உயரமான சிலைகள்

உலகம் முழுவதும் உள்ள சிலைகள், ஒவ்வொன்றும் நம்பிக்கை, வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, வானுயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான சிலைகள், கட்டுமான சாதனையாக மட்டுமல்லாமல், தேசத்தின் பெருமையாகவும் உள்ளன. இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள டாப் 10 உயரமான சிலைகள் எங்கெல்லாம் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அரசு முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் ₹1 அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்ட மெசேஜ் உங்களுக்கு வந்தால், நீங்கள் திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த முறையும் அரசு இதேபோல் தான் செய்தது. யாருக்கெல்லாம் மெசேஜ் வந்திருக்கிறது?
News November 24, 2025
6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள்: அர்ச்சனா பட்நாயக்

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு SIR படிவங்களை அதிகம் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை 6.16 கோடி பேருக்கு நேரடியாக SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் SIR படிவங்களில் பெயர் இருக்கும். மேலும், வரும் டிச.4-க்கு பிறகு SIR பணிகள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


