News April 22, 2024
மசாலா பாக்கெட்களில் ஆபத்து

மசாலா தயாரித்து விற்பனை செய்யும் MDH-ன் Curry Powder, Mixed Masala Powder, Sambhar Masala மற்றும் Everest நிறுவனத்தின் Fish Curry Masala-இல் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளதாம். இந்த மசாலாகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் ஹாங்காங், சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றம் சாட்டப்பட்ட மசாலா பிராண்டுகள் திரும்ப பெறப்பட்டன.
Similar News
News January 14, 2026
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க.. தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் *மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் *கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்
News January 14, 2026
‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News January 14, 2026
2-வது ODI: வெற்றியை நோக்கி நியூசிலாந்து

ராஜ்கோட்டில் நடக்கும் 2-வது ODI-ல், நியூசிலாந்து வெற்றி முகத்தில் உள்ளது. 285 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய NZ, முதல் 10 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு டேரில் மிட்செல், வில் யங் அபாரமாக ஆடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்கள் உள்ளன. NZ-ன் வெற்றியை தடுக்க இந்தியா என்ன செய்யணும்?


