News January 19, 2025
ஆண்களுக்கு ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
Similar News
News August 25, 2025
விஜய் பட சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கூலி’..!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
News August 25, 2025
BREAKING: தமிழக ஆசிரியர்களுக்கு நற்செய்தி

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.