News December 4, 2024
DANGER: இந்த நம்பரில் இருந்து CALL வருதா..?

சாதாரண செல்போன் கால்கள் மூலமாகவே மிகப்பெரிய மோசடி அரங்கேறி வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதன்படி, +94777455913, +37127913091, +56322553736 என்ற நம்பர்களில் இருந்து கால்கள் வந்து கட் ஆகிவிடும். பின்னர், நாம் அந்த நம்பர்களை திரும்ப அழைத்தால், கம்ப்யூட்டர் வாய்ஸ் #90, #09 நம்பர்களை டயல் செய்ய சொல்லும். அவ்வாறு செய்தால் நம் வங்கிக்கணக்கு விவரங்கள் திருடப்பட்டு விடும். SHARE IT.
Similar News
News April 29, 2025
இன்னும் நிறைய இருக்கு சாம்பியன்: யூசுஃப் பதான்

IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.
News April 29, 2025
லியோ டால்ஸ்டாய் பொன்மொழிகள்

*பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது. *வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது. *வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன. *எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. *நமக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்வதே உண்மையான ஞானம்.
News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.