News April 20, 2025

DANGER: அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?

image

அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50% பேருக்கு MYOPIA குறைபாடு ஏற்படும் எனவும், இது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Similar News

News December 5, 2025

விழுப்புரம் நாதக வேட்பாளர் அறிவிப்பு – பட்டியல் வெளியீடு!

image

தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பெண் மருத்துவர் “அபிநயா” போட்டியிடுவதாக இன்று (டிச.05) அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

image

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!