News April 1, 2025
லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக டான்ஸ்!

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஹாஸ்டலுக்கு வெளியே நிர்வாணமாக ஆபாச சைகையுடன் இளைஞர் நடனமாடியுள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குச் சென்ற போலீசார், மதுபோதையிலிருந்த வினோத்(35) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். எதுக்கு இந்த வேண்டாத வேலை?
Similar News
News April 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 04) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 4, 2025
இப்போதுதான் ரூ.50 கோடி.. விக்ரம் மார்க்கெட் என்னாச்சு?

விக்ரமின் வீர தீர சூரன் படம், 7 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் தடை காரணமாக முதல் நாள் (மார்ச் 27) மாலையில்தான் படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற போதும், ஒரு பெரிய நடிகரின் படத்துக்கான வசூல் இது இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. பிரதீப் ரங்கநாதனின் படமே 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலிக்கும்போது, விக்ரமிற்கு இது கம்மி என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
News April 4, 2025
தம்பதிகள் உறவு கொள்ள ஒருநாள் லீவு…!

ஆச்சரியமா இருக்கா? ரஷ்யாவில் லெனின் பிறந்த உல்யனோவ்க் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப். 12-ம் தேதியை கருத்தரிப்பு நாளாக அறிவித்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாண்டு ஜூன் 12-ம் தேதி ரஷ்ய தினத்தில் (9 மாதங்கள்) குழந்தை பெறுபவர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரிக்க இந்த நடைமுறை அங்கு செயல்பாட்டில் இருக்கிறதாம்.