News April 13, 2024
ATM-இல் சேதமான ₹500 நோட்டுகள்

ATMல் சேதமான ₹500 நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த நபர் ATMல் ₹10,000 பணம் எடுத்துள்ளார். அவருக்கு சேதமான ₹500 நோட்டுகள் வந்ததையடுத்து, வங்கியில் முறையிட்டு மாற்றியுள்ளார். பலரும் இதுபோன்ற பிரச்னையை சந்திப்பதால் அந்தப் பணம் செல்லுமா? செல்லாதா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
பாமக ஒற்றுமைக்கு GK மணி அழைப்பு!

பாமகவின் பேரவை குழு தலைவராக தாமே தொடர்வதாக GK மணி தெரிவித்துள்ளார். சபாநாயகரை சந்தித்த பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவுக்கு வந்துள்ள சோதனை, வேதனை அளிப்பதாக கூறினார். பாமக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு என்றார். முன்னதாக, குழு தலைவர் பொறுப்பிலிருந்து GK மணியை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
News October 14, 2025
சற்றுமுன்: விலை ஒரே நாளில் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹9 உயர்ந்து ₹206-க்கும், கிலோ வெள்ளி ₹9000 உயர்ந்து ₹20,6000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ₹9 ஆயிரம் உயர்ந்தது இதுவே முதல்முறை. இனி விலை குறைய வாய்ப்பில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News October 14, 2025
சமூக பொறுப்பில் தமிழ்நாடு தான் முதலிடம்.. அதிரடி சர்வே!

பாலின சமத்துவம், பொது பாதுகாப்பு, பன்முகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய Civic Sense-ல் எந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது என்ற ஆய்வை இந்தியா டுடே நடத்தியது. இதில், சமூக நடத்தையில் முதல் இடமும், பன்முகத்தன்மையில் 2-வது இடமும், பாலின சமத்துவத்தில் 3-வது இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, Civic sense தரவரிசையில் முதல் இடத்தில் கேரளாவும், 2-வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.