News October 23, 2025
இனி யூடியூப்பிலும் Daily Limit!

யூடியூப்பில் பலரும் நேரம் போவது தெரியாமலே ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனமே புது கட்டுப்பாடு ஒன்றை விதிக்கவுள்ளது. இனி யூஸர்கள் தாங்களே ‘daily Scrolling limit’ என்பதை செட் செய்யலாம். இதில் நாம் தேர்வு செய்யும் அளவில் மட்டுமே ரீல்ஸ் பார்க்க முடியும். குறிப்பிட்ட நேரத்தை நெருங்கினால், உங்களுக்கு யூடியூப்பில் இருந்து Notification-ம் அனுப்பப்படும்.
Similar News
News October 24, 2025
iPhone Air மாடல் இனி கிடைக்காதா?

ஐபோன் மாடல்களிலேயே மிகவும் மெலிதான iPhone Air மாடல் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அப்போன்கள் விற்றுத் தீர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தாலும், அங்கும் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதனால், அதற்கு மாற்றாக, அதிக வரவேற்பை பெற்றுள்ள ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் அதிகரிக்க உள்ளது.
News October 24, 2025
₹79,000 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள்

₹79,000 கோடி மதிப்பில் ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், இதில் உள்நாட்டு தயாரிப்புகளும் அடங்கும். இது இந்திய நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News October 24, 2025
கணவன், மனைவி மகிழ்ச்சியா இருக்க.. இதை கவனிங்க

இன்றைய காலத்தில் குடும்ப உறவுகள் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சண்டை போட்ட 30 நிமிடங்களுக்குள் சமாதானமாகும் தம்பதிகள், ஒன்றாக இருக்கும் வாய்ப்பு 80% அதிகம் இருக்கிறதாம். எனினும் இது சண்டையை தவிர்ப்பது அல்லது, அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஒரு சிரிப்பு, மென்மையான வார்த்தை அல்லது கட்டிப்பிடித்தல் கூட உறவை காப்பாற்றும் என்கின்றனர் உளவியலாளர்கள்.