News March 24, 2025
அப்பாடா.. ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டாங்க!

ஒருவழியாக கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? என்பதற்கு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பதில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, முட்டை ஓடு உருவாக OVOCLEIDIN 17 OC 17 என்ற புரதம் தேவை. இந்த புரதம் கோழியின் கருப்பையில் தான் உள்ளது. எனவே முதலில் கோழிதான் தோன்றி இருக்க வேண்டும்; அதன் பிறகே முட்டை வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
Similar News
News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
News March 25, 2025
மனோஜ் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
News March 25, 2025
குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?