News August 18, 2024
குழாய் பதிக்கும் பணியை நாளை தொடங்கி வைக்கிறார் அப்பாவு

நெல்லை மாவட்டத்தில் 831 கிராமங்களுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு ஏர்வாடி விளக்கிலிருந்து லெவிஞ்சிபுரம் வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இந்த குழாய் பதிக்கும் பணியை நாளை சபாநாயகர் அப்பாவு வள்ளியூர் சந்திப்பு அருகில் தொடங்கி வைக்கிறார். எம்பி, எம்எல்ஏ கலந்து கொள்கின்றனர்.
Similar News
News November 23, 2025
களக்காடு இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சிவசங்கர் (20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 22, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.