News March 2, 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு: விரைவில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA), 3% உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. AICPI Index அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை DA உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான DA உயர்வு வழக்கமாக மார்ச்சில் தான் அறிவிக்கப்படும். அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு (மார்ச் 14) முன்பாக, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த DA உயர்வு ஜூலையில் அறிவிக்கப்படும்.
Similar News
News March 13, 2026
வரலாற்று சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஈரானின் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு நூற்றாண்டு கூட நீடிக்காத ஒரு ஆட்சி, பண்டைய காலங்களைக் கொண்ட நாடுகளை வெறுப்பது இயல்பானது என்றும், ஆனால் யுனெஸ்கோ எங்கே? அதன் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 13, 2026
எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.


