News June 4, 2024
புதிய வரலாறு படைத்த டி.ஆர்.பாலு

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு அதிகமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற ப.சிதம்பரத்தின் சாதனையை டி.ஆர்.பாலு சமன் செய்ய உள்ளார். டி.ஆர் பாலு இதுவரை 6 முறை மக்களவை எம்.பியாக இருந்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7ஆவது முறையாக வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக, பா.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து 1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009இல் மக்களவைக்கு எம்.பியாக தேர்வானார்.
Similar News
News March 10, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 10, மாசி 26 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 10, 2026
விஜய்க்கு ரெண்டரை வருஷம் CM ஆஃபரை வீசும் பாஜக?

திமுக – காங்கிரஸ் உறுதியாகிவிட்ட நிலையில் தனித்து களம் காணும் மோடில் விஜய் இருக்கிறார். ஆனால் எப்படியாவது விஜய்யை NDA கூட்டணிக்குள் கொண்டுவர அமித் ஷா, பவன் கல்யாண் மூலம் பேசி வருகிறாராம். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் தான், கூட்டணிக்குள் வந்தால் நீங்க தான் ரெண்டரை வருஷம் CM என்ற ஆஃபரை பவன் கல்யாண் அளித்துள்ளாராம். ஆனால் அதற்கு தலையசைக்காத விஜய், பனையூரில் ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.
News March 10, 2026
CINEMA 360°: ₹50 கோடி வசூலித்த ‘தாய் கிழவி’

*லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. * ‘தாய் கிழவி’ படம் வெளியாகி 10 நாள்களில் உலகளவில் ₹50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. *ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் 2-வது சிங்கிள் ‘துரு துரு’ நாளை மாலை வெளியாக உள்ளது. *பிரான்ஸில் சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


