News April 25, 2024

சிலிண்டர் சோதனை இனி இலவசம்

image

வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் ₹200 கட்டணமாக வசூலித்தனர். ஆனால், இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே, இலவசமாக சோதனைச் செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.

Similar News

News January 3, 2026

எதில் அதிக நேரம் செலவாகிறது?

image

OTT, Reels உள்ளிட்டவைகளில் நேரம் செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியாவின் திரை பயன்பாட்டு நுகர்வு முறைகளை பற்றி தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2025-ல் பார்வையாளர்கள் எதில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் எதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 3, 2026

கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

image

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 3, 2026

‘அரசன்’ படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கும் சிம்பு!

image

அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 11 நாள்களாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 1980, 1992, 1995 காலகட்டங்களில் கதை நிகழ்வதால், சிம்பு 3 கெட்டப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த கபடி வீரர் ஒருவர், சென்னையில் கேங்ஸ்டராக மாறுவதை சுற்றி கதை நகர்வதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!