News March 26, 2024
‘சிலிண்டர் விலை ரூ.500 உயரும்’

பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதாகவும், தற்போது சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ₹100 குறைத்துள்ளது தேர்தல் நாடகம் என்றும் விமர்சித்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ₹500 உயர்த்தி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Similar News
News November 5, 2025
முடி சார்ந்த பிரச்னைகள் நீங்க இந்த Conditioner யூஸ் பண்ணுங்க

காஸ்ட்லியான Conditioner-களை வாங்கி முடியை பராமரிக்கிறீர்களா? வீட்டிலேயே இயற்கையான முறையில் Conditioner செய்யலாம். ➤கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள் ➤இவற்றை நன்றாக கலந்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள் ➤ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும் ➤எப்போதும் போல் ஷாம்பு போட்டு அலசுங்கள். SHARE.
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, <<18194621>>12-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News November 5, 2025
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

‘Thug Life’ படத்திற்கு பிறகு, அடுத்த பட வேலையில் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார். முன்னதாக, அவர் ருக்மணி வசந்தை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப்போகிறார் எனக் கூறப்பட்டது. அப்படத்தில் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காம்போ ஹிட்டடிக்குமா?


