News April 7, 2025
வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று(ஏப்.7) முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2025
பாஜக தலைவர் ரேசில் முந்தும் ஆனந்தன் அய்யாசாமி

தமிழகத்துக்கான பாஜக தலைவர் யார் என்று வரும் 11ஆம் தேதி அமித் ஷா அறிவிக்கவுள்ளார். அந்த ரேசில் நான் இல்லையென்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி ரேசில் முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் பணிபுரிந்தவர்.
News April 9, 2025
இந்தியாவிற்கு அடுத்த ஷாக்.. டிரம்ப் எடுத்த முடிவு

அமெரிக்காவில் மருந்து பொருள்கள் இறக்குமதிக்கும் அதிக வரிவிதிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது இந்திய மருந்து துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதனால் அமெரிக்க நுகர்வோருக்கு அதிக விலையேற்றம் ஏற்படும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். 2024 நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த $27.9 பில்லியன் மதிப்பிலான மருந்துகளில், 31% அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்துள்ளது.
News April 9, 2025
பெட்ரோலுக்கு இவளோ வரி கட்டுறோமா!

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் நாம் ₹43.68 வரியாக செலுத்துகிறோம். அதாவது, நாம் செலுத்தும் ₹102-ல் கிட்டத்தட்ட ₹58 மட்டுமே பெட்ரோலின் விலை. இந்த வரியில் மத்திய அரசுக்கு 21.90 ரூபாயும், மாநில அரசுக்கு 21.78 ரூபாயும் வரியாக செல்கிறது. பெட்ரோல் & டீசலை GSTக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சம் 28% மட்டுமே வரி விதிக்க முடியும் என்பதால்தான் மத்திய, மாநில அரசுகள் அத்திட்டத்தை எதிர்க்கின்றன.