News May 14, 2024
தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி

தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அங்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40- 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News April 6, 2026
அண்ணாமலை-நயினார் மோதலா? H.ராஜா Open Talk

நயினாருடன் மோதல் இருந்ததால்தான் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த H.ராஜா, பாஜகவுக்குள் சண்டையை ஏற்படுத்தவே இப்படியான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். அண்ணாமலை கடந்த தேர்தலில் போட்டியிட்டார். தற்போது போட்டியிடவில்லை அவ்வளவுதான் வேறு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
₹40,000 சம்பளம், 667 காலியிடங்கள்.. இன்றே கடைசி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News April 6, 2026
மேட்ச் தோற்றாலும் CSK-ன் மாஸ் ரெக்கார்டு!

பொதுவாக IPL அதிக ரன்களை விளாசும் அணிகள் எது என்று கேட்டால், பல ரசிகர்களும் SRH, RCB, MI போன்ற அணிகளை குறிப்பிடுவார்கள். ஆனால், அதிகமுறை 200+ ரன்களை விளாசியுள்ளது CSK தான். நேற்றைய RCB-க்கு எதிரான 207 ஸ்கோரையும் சேர்த்து, இதுவரை 37 முறை CSK 200+ ரன்களை விளாசி உள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் RCB(36), 3-வது இடத்தில் PBKS(33), 4-வது இடத்தில் MI(32) ஆகிய அணிகள் உள்ளன.


