News October 5, 2025

கனமழை வெளுத்து வாங்கும்

image

நடப்பாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என கணித்துள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவான ’சக்தி’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.

Similar News

News April 3, 2026

ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதில் மாற்றலாம்

image

வெளிநாடு செல்லும் இந்தியர்கள் ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதாக மாற்றிக்கொள்ளும் வகையில் விதிகளை திருத்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அந்நிய செலாவணி கவுன்ட்டர்களில் இனி வெளிநாடு செல்லும் இந்தியர்களும் இந்திய ரூபாயை மாற்றி வெளிநாட்டு நாணயமாக மாற்றலாம். முன்னதாக, இந்தியாவில் வெளிநாட்டினருக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டு வந்தது.

News April 3, 2026

3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ராமதாஸ்

image

சசிகலாவின் அஇபுதமமுக-வில் கூட்டணி வைத்திருக்கும் ராமதாஸ், தன் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 23-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி அணைக்கட்டு : வெங்கடேஷ், ஆற்காடு : அஜய்ராஜ், அரக்கோணம் : வெற்றிவேல், கீழ்வேளூர் : முகுந்தன், சோளிங்கர் : விஜயன், திட்டக்குடி : கருப்பன் மாணிக்கம், ஆரணி : கலைமணி, கீழ்பென்னாத்தூர் : ஜானகிராமன், ஓமலூர் : சுரேஷ்குமார் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

NDA கூட்டணிக்கு முழு ஆதரவு

image

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு சிறு கட்சிகள், இயக்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இதுவரை 52 இயக்கங்கள், சிறு கட்சிகள் & அமைப்புகள் தன்னை சந்தித்து NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்திருப்பதாக X தளத்தில் நயினார் கூறியுள்ளார். இவர்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை மாற்றுவதற்காக இலக்கை அடைவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!