News May 25, 2024
வங்கக்கடலில் உருவானது ராமெல் புயல்

தெற்கு வங்கக்கடலில் 23ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் வடகிழக்கில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் நேற்றிரவு புயலாக மாறியது. இதற்கு ராமெல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தொடர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது மேலும் வடக்கில் நகர்ந்து, இன்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை இரவு மேற்குவங்கத்தில் கரையை கடக்கும்.
Similar News
News September 16, 2025
போராட்டத்திற்கு தயாராக வேண்டும்: வைகோ

திருச்சியில் நேற்று மதிமுக மாநாடு நடைபெற்றது. அதில், *கீழடி ஆய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். *GST வரி சீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும். *30 நாள்கள் சிறையில் இருந்தால் MP, CM பதவி பறிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும். *மரபணு மாற்ற நெல் சாகுபடிக்கு எதிராக போராட்டத்திற்கு தயாராக வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
News September 16, 2025
செவ்வாய்க்கிழமையும் சக்தி வாய்ந்த முருகன் வழிபாடும்!

தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள். இன்றே தொடங்குங்கள். SHARE IT.
News September 16, 2025
BREAKING: நீக்கப்படுகிறாரா செங்கோட்டையன்?

TTV, OPS-க்கு ஆதரவாக செயல்பட்டால், அதிமுகவில் இருந்து உடனே நீக்குவது EPS வழக்கம். இதற்கிடையில் செங்கோட்டையனுடன் பேசி வருவதாக OPS கூறியிருந்தார். இந்நிலையில், சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம்; அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று EPS சூளுரைத்துள்ளார். இதனால், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.