News March 31, 2025
‘சியான் 63’ படத்தின் அப்டேட்

‘சியான் 63’ படத்தின் ஷூட்டிங்கை வரும் மே மாதம் 2ஆவது வாரத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘வீரமே ஜெயம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News April 3, 2025
பீம்ஸ்டெக் என்றால் என்ன?

வங்காள விரிகுடா அருகிலுள்ள நாடுகள் இடையே பொருளாதார தொடர்பை ஏற்படுத்த 1997இல் உருவாக்கப்பட்டது பீம்ஸ்டெக். இதில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் அங்கம் வகிக்கின்றன. மோடி பிரதமரான பிறகு பீம்ஸ்டெக்கிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. பீம்ஸ்டெக் நாடுகள் மக்கள் தொகை 167 கோடி. ஜிடிபி 2.88 டிரில்லியன் டாலர். 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.
News April 3, 2025
FD டெபாசிட் வட்டியை குறைத்த HDFC, YES BANK வங்கிகள்

FD டெபாசிட் மீதான வட்டியை HDFC, YES BANK குறைத்துள்ளன. ரூ.3 கோடிக்கும் குறைவான தொகை, 2 ஆண்டுகள், 11 மாதங்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் வட்டியில் 30 புள்ளிகளையும், 4 Yrs, 7 Months டெபாசிட் திட்டங்களுக்கு 40 புள்ளிகளையும் HDFC குறைத்துள்ளது. இதேபோல், YES BANK வங்கியும் வட்டியில் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. சேமிப்புக்கு வட்டி குறைத்தாலும், அதிக அளவில் கடன்கள் வழங்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
News April 3, 2025
டாப் 5 பிளாஸ்டிக் மாசு நிறைந்த நாடுகள்!

பிளாஸ்டிக் மாசு நிறைந்த 5 நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக 3.5 மி.டன்னுடன் நைஜீரியா, 3.4 மி.டன்னுடன் இந்தோனேஷியா, 2.8 மி.டன்னுடன் சீனா, 2.6 மி.டன்னுடன் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.